என் தமிழ்

துருக்கியில் ஓடுதளப் பாதையில் இருந்து விலகிச் சென்று புல்தரையில் நின்ற விமானம்

fli

மார்ச் 5, துருக்கியில் இருந்து காத்மாண்டு சென்ற துருக்கி விமானம் தரையிறங்கும்போது ஓடுதளப் பாதையில் இருந்து விலகிச் சென்று புல்தரை பகுதியில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 238 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விமானம் இறங்க சிக்னல் கிடைத்ததைத் தொடர்ந்து விமானம் ஓடுதளப் பாதையில் இறங்கியது. அப்போது சரியான பாதையில் விமானம் இறங்காததால், சறுக்கிச்சென்று அருகில் இருந்த புல்வெளிக்குள் சிக்கியது. பயணிகள் அனைவரும் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

Scroll to Top