MH17 சிதைந்த பாகங்களை பயணிகளின் உறவினர்கள் காண அனுமதி

MH17 சிதைந்த பாகங்களை பயணிகளின் உறவினர்கள் காண அனுமதி

mh171

மார்ச் 4, கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணையாள் சுட்டு வீழ்த்தப்பட்டு வானிலேயே வெடித்து சிதறியது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அதிலிருந்த 298 பேரும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

MH17 விமான விபத்தின் சிதைந்த பாகங்கள் அனைத்தும் நெதர்லாந்து ஆகாயப்படை தளத்திற்கு டிரக் வாகனத்தின் மூலம் விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்டன.

சிதைந்த விமானத்தின் பாகங்களைப் பார்ப்பதற்கு நெதர்லாந்து அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து அவ்விபத்தில் பயணிகளின் உறவினர்கள் கிட்டத்தட்ட 500 பேர் ஒவ்வொரு வாரமும் அந்த சிதைந்த பாகங்களைக் காண வருவார்கள் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

mh173mh172