மார்ச் 4, பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் கடல் ஆராய்ச்சிக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1டி என்ற செயற்கைகோளுடன் வரும் 9-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 9-ந் தேதி மாலை 6.35 மணிக்கு விண்ணுக்கு ஏவப்படும் எனவும், இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 வருடம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கை கோள் இயற்கை சீற்றம், இயற்கை இடர் மேலாண்மை, கடல்சார் கண்காணிப்பு ஆகிய ஆய்வுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் 1500 கிலோ மீட்டர் சுற்றளவு, பரப்பளவு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும் எனவும் மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post: பயங்கர ஆயுதங்களுடன் நான்கு ஆடவர்கள் கைது