மார்ச் 3, இந்தி நடிகை சோனம் கபூர் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சோனம் கபூரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து படப்பிடிப்பு தளத்துக்கு திரும்புவார் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் ஒருவர் நேற்று நிருபர்களிடம் கூறினார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை அடுத்த கொண்டல் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை சோனம் கபூர் திடீரென பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டார்.
Previous Post: எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின
Next Post: நாடாளுமன்ற வளாகத்தில் மோடியின் மதிய உணவு