மார்ச் 2, பினாங்கு மாநிலத்திலுள்ள கிளை தலைவர்களை சந்தித்த ம.இ.காவின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் மாநிலத்தில் கட்சியை மேலும் வலுப்படுத்த அடித்தக்கட்ட நடவடிக்கையாக மாநில தொடர்புக்குழுவை மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநில தொடர்புக் குழுவின் துணைதலைவராக பாகான் தொகுதி தலைவர் டத்தோ ஹென்றி நியமனம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. இப்பதவியை வகித்து வந்த புக்கிட் மெர்தாஜம் தொகுதித் தலைவர் டத்தோ ஆர் முருகையா தொடர்புக்குழு பொருளாளராக மாற்றம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.