மார்ச் 2, மாயமான மலேசியா விமானத் தேடலில் எதுவுமே கிடைக்காத நிலையில் தேடல் பணியை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து சீனா, மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆலோசித்து வருகின்றன. இருப்பினும் விமானத்தை தேடத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். விமானத்தை தேட 40.5 மில்லியன் டாலர் செலவாகியுள்ளது. இந்த செலவை சீனா மற்றும் மலேசியா ஏற்றுள்ளது. ஆனால் இனியும் தேடல் பணியை தொடர வேண்டும் எனில் சர்வதேச நாடுகளின் உதவி தேவைப்படும் என்றார் ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் ட்ரஸ்.
Previous Post: பினாங்கு மாநில ம.இ.காவில் மாற்றம்
Next Post: எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின