பிப்ரவரி 26, தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக வரலாற்று சிறப்பு மிக்க படங்களில் நடிப்பவர் அனுஷ்கா. அனுஷ்கா தற்போது சுமார் ரூ 80 கோடி பட்ஜெட் மதிப்புள்ள ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகை மற்றும் அலங்கார பொருட்களின் மதிப்பு பல கோடிகள் என்பதனால் அவரை சுற்றி பாதுகாவலர்கள் பலர் இருந்து கொண்டே தான் இருக்கிறார்களாம். மேலும் யாராலும் அனுஷ்காவை யாரும் எளிதில் பார்க்க முடியாத படி மிகவும் கெடுபிடியாக உள்ளதாம் படக்குழு.






