பிப்ரவரி 26, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள ஹசாக்கான் பகுதிக்குள் புகுந்து 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை மக்களை கடத்தி சென்றுள்ளனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். கடத்தப்பட்டவர்களில் பலரை தீவிரவாதிகள் அழைத்து சென்றபோது வழியில் சுட்டு கொன்றுவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. கடந்த வாரம் லிபியாவில் வசித்து வந்த எகிப்து நாட்டை சேர்ந்த 21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தார்கள்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் 400க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை கடத்தி சென்றுள்ளனர்
