பிப்ரவரி 25, நாடு முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவின் சொத்துக்களின் பட்டியலை போது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த சொத்துக்களின் பத்திரங்கள் தஸ்தா வேஜூகள் அனைத்தும் தேவஸ்தானத்திடம் உள்ளது. இதன்மூலம் அந்த நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்தால் அதுபற்றி பொது மக்களே புகார் செய்வதற்காக இவ்வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்துக்கு தபாலில் வரும் காசோலைகள், கடிதங்கள் மற்றும் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் சாம்பசிவராவ் கூறினார்.