இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

BarackObama

பிப்ரவரி 20, இந்தியர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, அமெரிக்கா மன்னிப்பு கோரியது. அமெரிக்காவில், அலபாமாவில் வசிக்கும் தம் மகனை காணச் சென்ற சுரேஷ்பாய் படேல், போலீஸ் தாக்கியதால், பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அலபாமா கவர்னர், இந்திய துணை தூதருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், படேல் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது. மாடிசன் நகர போலீஸ் அதிகாரிகளின் செயல் குறித்து, எப்.பி.ஐ., புலனாய்வுடன், தனிப்பட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது; இச்செயலில் நீதி நிலை நாட்டப்படும் என, இந்திய அரசுக்கு உறுதி அளிக்கிறேன், என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், படேல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி எரிக் பார்க்கர், ஜாமினில் வெளிவந்துள்ளார்.