பிப்ரவரி 11, ஆபாச நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் நடிக்கவந்து கோலிவுட், டோலிவுட், சான்டல்வுட் வரை தலைகாட்டிவிட்டார். அவரை பாலில் குளிப்பாட்டினால் எப்படி இருக்கும் என்று பாலிவுட் இயக்குனர் பாபி கானுக்கு வித்தியாசமான யோசனை வந்தது. தான் இயக்கும் ‘ஏக் பெஹலி லீலா‘ படத்தில் போதை ஏற்றும் பல காட்சிகளில் சன்னியை நடிக்க வைத்ததுடன் சிறப்பு பாடல் காட்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். இதற்காக 100 லிட்டர் பால் வரவழைத்தார். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் சன்னி லியோனுக்கு வெள்ளை தாவணி மட்டும் கொடுத்து அதை டவல்போல் கட்டிவரச் சொன்னார். அதன்படி சன்னி படுகவர்ச்சியாக வெள்ளை தாவணியை டவல்போல் கட்டிவந்தார். அவருடன் துணை நடன பெண்களும் அதேபாணியில் உடை அணிந்து வர பூட்டிய அரங்கிற்குள் பாடல் காட்சி படமாக்கினார். சன்னி லியோனை அமர வைத்து அவரை பாலில் குளிப்பாட்டினார்கள்.