என் தமிழ்

குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

Arvind_Kejriwal_AAP_360

பிப்ரவரி 11, டெல்லி முதலமைச்சராக வரும் 14-ம் தேதி பதவியேற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசவுள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், வரதோரா, சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாட்டம் கலைகட்டியுள்ளது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து தான்
ஏற்கனவே டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்த விலகிய பிப்ரவரி 14-ம் தேதி மீண்டும் அந்த பதவியை ஏற்க கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். டெல்லி ராம்லிலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் படி பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Scroll to Top