அம்மாவாக நடிச்சா என்ன தப்பு: ஸ்ரேயா

அம்மாவாக நடிச்சா என்ன தப்பு: ஸ்ரேயா

shriya-saran

பிப்ரவரி 10, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கோபாலா கோபாலா’ என்ற தெலுங்கு படத்தில் 10 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் ஸ்ரேயா. இதுபற்றி அவர் கூறியதாவது:ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க நினைக்கிறேன். 10 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்ததை சிலர் குறை கூறுகிறார்கள். அம்மாவாக நடித்தால் என்ன தப்பு? அதில் என்ன தவறு இருக்கிறது? நான் நடிகை. என் தொழில் நடிப்பது. அதைதான் செய்தேன். எனக்குப் பிடிக்கிற எந்த கேரக்டரிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ‘எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறீர்களே? உடலை எப்படி பேணுகிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். யோகாவும் உடற்பயிற்சியும் என்னுடன் எப்போதும் இருக்கிறது. அதை விட்டுவிட மாட்டேன். நான் சாப்பாட்டுப் பிரியைதான். ஆனாலும் அளவாக வைத்துக்கொள்வேன். அதனால்தான் உடலை ஒரே மாதிரி வைத்துக்கொள்ள முடிகிறது.