தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 9 உடல்கள் மீட்பு

தைவானில் விமானம் ஆற்றுக்குள் விழுந்தது 9 உடல்கள் மீட்பு

flightriver

பிப்ரவரி 4, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது.

தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்தது. இதுவரை விமானத்தில் பயணம் செய்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 53 பயணிகளுடன் 5 பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.