பிப்ரவரி 4, எல்.பி.ஜி. டேங்கர் லாரி லாரிகளின் வேலைநிறுத்தம் 5-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் 3,200 டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி வாடகை வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்தால் 6 ஆயிரம் ஓட்டுனர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 5-வது நாளாக ஸ்டிரைக் தொடர்வதால் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்ள்ளது.