பிப்ரவரி 3, டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படு வதால் மேட்டூர் அணை யின் நீர்மட்டம் 78.87 அடியாக சரிந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி 80.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 78.87 அடியாக குறைந்தது. அப்போது, அணைக்கு வினாடிக்கு 197 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர் இருப்பு 40.83 டிஎம்சியாக உள்ளது.
Previous Post: பத்துமலையில் களைக்கட்டியது தைப்பூச கொண்டாட்டம்
Next Post: தாய்,தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்