பிடித்த ஹீரோ யார் என்றதற்கு அஜீத் என்று கூறிய திரிஷா, யாரையும் புண்படுத்த இப்படி கூறவில்லை என்று பல்டி அடித்தார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார் திரிஷா. மேடையில் அவரிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அஜீத்துடன் பணிபுரிய பிடிப்பதாக கூறினார். மேடையைவிட்டு இறங்கிய பிறகுதான் அவருக்கு இந்த பதில் விவகாரத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார்.
உடனடியாக இணைய தள பக்கத்தில் ஒரு விளக்கம் அளித்தார். தயவுசெய்து நான் சொன்ன பதிலை யாரும் ஊதி பெரிசாக்க வேண்டாம். நான் நடித்த சூப்பர் ஸ்டார் நடிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். என்னுடைய பதில் யார் மனதையும் காயப்படுத்துவதற்காக சொல்லப்பட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறும்போது, பொதுப்படையான ஒரு கேள்வி என்னிடம் மேடையில் கேட்கப்பட்டது.
அதற்கு எதிர்மறையாக பதில் சொல்ல¤விட்டதாக ரசிகர்கள் யாரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காகவே இணைய தள பக்கத்தில் விளக்கம் அளித்தேன் என்றார். எப்போதுமே அஜீத்தை தனது பேவரைட் என கூறும் திரிஷா, இம்முறை வாய்ப்புகள் குறைந்து வருவதாலேயே மற்ற ஹீரோக்களை பகைத்துக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம். அதனாலேயே தனது கருத்திலிருந்து பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது. –
Previous Post: விரைவில் புதுப்பட வேலைகளை துவங்கும்: செல்வராகவன்
Next Post: தெலுங்கு படத்தில்: சூர்யா