என் தமிழ்

மலேசியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த படகு விபத்து: 20 பேர் பலி

boat

ஜனவரி 30, மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்ந்து மீன்பிடி படகு ஒன்றில் தப்பி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் மாயமானார்கள்.

இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அதனை மீறி மலேசியாவுக்கு சட்ட விரோதமாக அவர்கள் வர முயன்றுள்ளனர். சில வருடங்களில் வங்காளதேச நாட்டின் மக்கள் மற்றும் மியான்மர் நாட்டின் ரோஹிங்யா அகதிகள் ஆகியோர் தங்களது வாழ்வு மேம்பட வேண்டி மலேசியாவிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டில் இதுபோன்ற சம்பவத்தில் 100 பேர் பலியாகியுள்ளனர். மக்களிடம் இருந்து சில தரகர்கள் பணத்தை பெற்று கொண்டு மலேசியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி கூறி விடுகின்றனர்.

Scroll to Top