ரூ.50,000 கோடி மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் திட்டம்

ரூ.50,000 கோடி மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் திட்டம்

baat

ஜனவரி 30, இந்தியாவில் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தில் ஆர்வம் உள்ளதா என ஜப்பானிய அரசிடம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆயுத ஏற்றுமதி செய்வதில் ஜப்பானுக்கு இருந்த தடை சமீபத்தில் நீங்கியதையடுத்து,  நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்கும் சாத்தியங்கள் குறித்து பரிசீலனை செய்யுமாறு இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் இதுவரை இந்தியாவுக்காக நீர்மூழ்கி கப்பல்கள் உற்பத்தி செய்வதில் அனுபவம் வாய்ந்தவை. இருப்பினும் மிட்சுபிஷி மற்றும் கவாசாகி ஹெவிஇண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றால்தயாரிக்கப்படும் 4,200 டன் எடை கொண்ட நவீன ‘சோர்யு’ வகை நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் இந்த திட்டத்திற்கு ஜப்பானிய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.