ஜனவரி 30, பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தகத்தில் 10 பில்லியன் டாலர் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மேலும் உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில், எங்களுக்கு பணம் சம்பாதிப்பதில் மட்டுமே ஆர்வம் இருந்தால், நாங்கள் அமெரிக்க மற்றும் பிற வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களின் விளம்பரங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருப்போம். ஆனால் எங்கள் எண்ணம் வருவாயை மட்டுமே நோக்கி இல்லை. நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறது. மேலும் நிறுவனம் மொத்த உலகத்தையும் இணைக்கும் பணியில் பேஸ்புக் உள்ளது என தெரிவித்தார்.
Next Post: தனுஷை தவிர்த்த காஜல் அகர்வால்