என் தமிழ்

ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு:டாக்டர் S.சுப்ரமணியம்

YBM_MOHR_DrSubra_modified

ஜனவரி 29, இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த ம.இ.காவின் துணை தலைவரும் சுகாதார அமைச்சருமான மாண்புமிகு டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் ம.இ.கா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய செயற்குழு தேர்தலில் முறைகேடு நடந்ததாக சங்கங்களின் பதிவிலாகா அறிவித்திருந்தது. தேர்தல் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் வரை குறிப்பிட்ட பதிவுகளுக்கு எந்த நியமனங்களையும் அங்கீகரிக்க முடியாது என்று ROS கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஜனவரி 24ஆம் தேதி 90 பிரிவு தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 2009ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கட்சியை நிர்வகிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தீர்மானங்கள் பிரதமரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் S.சுப்ரமணியம் தெரிவித்தார்.

Scroll to Top