ஜனவரி 28, சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதி கடோங் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ரூ.27 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செண்பக விநாயகர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மற்றும் மந்திரிகள், எம்.பி.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை பூஜித்து இந்த கோவில் உருவானது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருப்பணிகளை, தமிழ்நாட்டை சேர்ந்த பழனி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர், சோழர்கால கட்டிடக்கலை பாணியில் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.