என் தமிழ்

பழநி கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.83 கோடி

Palani1

ஜனவரி 28, பழநி கோயிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 கோடியே 83 லட்சம் வசூலானது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 14 நாட்களுக்கான உண்டியல் எண்ணிக்கை கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. உண்டியல்  எண்ணிக்கையில் வங்கி மற்றும் கோயில் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். இதில் ரொக்கமாக  ரூ.1 கோடியே 82 லட்சத்து 85 ஆயிரத்து 637 கிடைத்தது. தங்கம் 665 கிராம், வெள்ளி 11 ஆயிரத்து 350 கிராம், வெளிநாட்டு கரன்சி 466  கிடைத்தது.

Scroll to Top