ஜனவரி 27, கட்சியில் குறிப்பிட்ட தேதிக்குள் குறிப்பிட்ட கிளை, தொகுதி, மத்தியச் செயலவை உதவித்தலைவர்களுக்கான தேர்தல் முறைகேடுகளை நிவர்த்தி செய்து புது முடிவுகளை ஆதாரத்துடன் நிருபிக்க ஏப்ரல் 1 வரை சங்கபதிவிலாகா கால அவகாசம் வழங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஏப்ரல் ஒன்று வரை நாம் காத்திருந்து ஆற அமர வேலை செய்தால் முட்டாள்கள் தினத்தில் (ஏப்ரல் 1) நாம்தான் அனைவராலும் சிரிக்கப்படுவோம்.
சங்கப்பதிவிலாக நாட்டில் ஏற்கனவே இருக்கும் சங்க விதிமுறையைக் கொண்டு நமது மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆக நடந்த தவறுகளை நடத்த அதை பின்பற்றி நடப்பத்துதானே சிறந்தது ஆனால் இப்பொழுதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினராக நமது கட்சியை மீட்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் நமது கட்சி தலைமை எடுத்தாக எனக்கு தெரியவில்லை. காரணம் இப்பிரச்சனைகளை களையாமல் தேசிய தலைவர் புதிதாக ஒரு பிரச்சனையை குமார் அம்மான் வாயிலாக கட்சிக்கு வழங்கியுள்ளார். 9 மத்தியச் செயலவை உறுப்பினர்கள்தான் தேசிய தலைவரால் அமர்த்தப்பட முடியும் என கட்சியின் அரசியலைமைப்பு கூறியதற்கு மேலாக இன்னும் மூவரை ஆக மொத்தம் 12 பேரை நமது தலைவர் கடந்த மத்தியச் செயலவையில் நியமித்துள்ளார். அப்படியிருக்க இப்பொழுது குமார் அம்மானை எந்த விதிமுறைக்கு உட்பட்டு தலைவர் நியமித்துள்ளார் என்று தெரியவில்லை. அப்பதவிக்கொண்டு அவர் செய்யும் தேவையற்ற வேலைகள் கட்சிக்கு இன்னும் களங்கத்தை எற்படுத்துகிறது. கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய பாஸ் எடுக்கவேண்டும் என்பதும் தவறான செய்திகளை நாடு முழுவதும் உள்ள ம.இ.கா உறுப்பினர்களைச் சந்தித்து பேசுவதும், என குமார் அம்மான் நடமாடி வருகிறார். இதற்கு உச்சக்கட்டமாக, சங்கபதிவிலாகவின் விசாரணையில் இவருக் திருப்தியில்லை எனவும் இன்னொரு விசாரணை கண்டிப்பாக தேவை எனவும் சங்கப்பதிவிலாகவில் உண்ணாவிரதப் போராட்டத்தை தனது வாகன ஒட்டுனருடன் சேர்த்து 6 பேருடன் தொடங்கியிருக்கிறார். இது கட்சிக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி தேசியமுன்னணியின் ஒர் அங்கமாக இருக்கும் ம.இ.காவை பிரதிநிதித்து அரசாங்கத்துறையை எதிர்த்து இப்படி போராட இவருக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று தெரியவில்லை.
பிரச்சனையை உடனடியாக நாம் தீர்க்காமல் திரிந்தால் இப்படித்தான் தேவையில்லாத வம்பு வந்து சேரும். ஆக கட்சியின் தேசியத்தலைவரும் தேசிய துணைத்தலைவரும் ஆளுக்கு ஒரு மூளையில் கண்ணாமூச்சி ஆடுவதை நிறுத்திவிட்டு இப்பிரச்சனையை களைய களத்தில் உடனடியாக இறங்கவேண்டும். அவர்களுக்குள் என்ன பிரச்சனை விரோரம், மனசங்கடன் இருந்தாலும், அதை எல்லாம் மூட்டைக்கட்டிவிட்டு கட்சியை காப்பாற்ற இறங்க வேண்டும். அது மட்டுமின்றி கட்சியின் இந்த இக்கட்டான ழுழ்நிலையை சாதகமாக எடுத்துக்கொண்டு யாரும் அரசியல் செய்யாமல் அனைவரும் கைக்கொர்த்து இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு வரவேண்டும். இல்லையென்றால் ரெண்டுப் பட்டுகிடக்கும் ஊருக்கு கூத்தடிக்க கூத்தாடிகள் தயாராக இருப்பதை நினைவுக்கொள்ளுங்கள். கட்சியின் மானமும் எதிர்காலமும் நம் கையில் என்பதால் தேசியத் தலைவர், துணைத்தலைவருடன் அனைவரும் பொறுப்பறிந்து செயபடுவோம் என்று ம.இ.கா மத்தியச் செயலவை உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் தர்ம குமரன் தன்பாலன்.