ஜனவரி 23, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால்-லட்சுமி மேனன் நடித்த படம் ‘பாண்டிய நாடு‘. இது கன்னடத்தில் ‘ருத்ரதாண்டவா’ பெயரில் ரீமேக் ஆகிறது. விஷால் ஏற்ற வேடத்தில் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கிறார். ஆசிரியையாக லட்சுமிமேனன் நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு ஹீரோயினை தேர்வு செய்வதில் இயக்குனர் குரு தேஸ்பாண்டேவுக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து நயன்தாரா ஆசிரியையாக நடித்த ஏகன், சுஷ்மிதா சென் ஆசிரியையாக நடித்த ‘மை ஹுன் நா‘ இந்தி படத்தை பார்த்தார். பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு குட்டி ராதிகா பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தார்.‘பாண்டியநாடு’வில் லட்சுமிமேனன் ஹோம்லி வேடத்தில் தோன்றினார். ஆனால் நயன்தாரா, சுஷ்மிதா சென் ஆசிரியையாக நடித் தாலும் கவர்ச்சியான கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தனர். அந்த வகையில் குட்டி ராதிகா பொருத்தமாக இருந்தார்’ என்றார்.