ம.இ.கா தலைமையகத்தில் எந்தவித கதவடைப்பும் இல்லை. வழக்கம்போல் அலுவலகப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவுத் தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ம.இ.கா தலைமையகம் மற்றும் அதன் கட்டிடம், பணியாளர் பாதுகாப்பு குறித்து இன்றைய தலைமைச் செயலாளர் டத்தோ குமார் அம்மான் சில திட்டங்களை வகுத்து செயல்வடிவம் கண்டு வருகின்றார் ம.இ.கஎன்று நேற்று வெறியிட்ட ஒர் அறிக்கையில் கூறினார்.
நேற்றைய தமிழ்ப்பத்திரிகை ஒன்றில் ம.இ.கா தலைமையகத்தில் கதவடைப்பு ஏன் என்ற செய்திக்கு பதில் கொடுக்கும் வகையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ம.இ.கா தலைமையகத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழக்கம்போல் சிலாங்கூர், ஜொகூர் மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்லாமல் இதர மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும், பொதுமக்களும் முறையாக தலைமையகத்திற்கு வந்து போய்க்கொண்டிருக்கின்றனர், ஆகவே, பாதுகாப்பு செயலாக்கத்தை பிறக்கணிப்பதற்கான பேச்சுக்கோ இங்கு இடமில்லை என்றார்.
உண்மை நிலவரம் தெரியாமல் யாரும் உண்மைக்குப் புறப்பாகப் பேசுவது நியாயமில்லை ம.இ.கா தலைமையகத்திற்கு வருகின்றவர்களிடம் எந்த அடையாள ஆவணங்கள்ளும் கேட்கப்படுவதில்லை.