ஜனவரி 20, டேட்டிங் அன்னிய கலாசாரமாக இருந்தாலும், எனக்கு அது பிடிக்கும். ஆண் நண்பருடன் ‘டேட்டிங்’ போவதை விரும்புறேன். டேட்டிங்கை சந்தோஷமாக அனுபவிக்க சில முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளவேண்டும்.
டேட்டிங் போவது முடிவானதும் பிக்னிக்குக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ருசியான உணவு வகைகளை தயார் செய்து கூடையில் பத்திரப்படுத்த வேண்டும்.
உட்கார்ந்து பேசுவதற்கு ஏதுவாக பூ வேலைப்பாடுடன் கூடிய அழகான பெட்சீட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பெட்சீட் கலர் கலராக இருக்க வேண்டும். குளிர் பிரதேசமாக பார்த்து ‘டேட்டிங்’ போக வேண்டும்.
பனி பெய்தால் தான் தீ மூட்டி குளிர் காயலாம். குளிர் இல்லாத இடங்களுக்கு போனால் டேட்டிங்கே வேஸ்டாகி விடும். கடற்கரை பீச் பகுதிகள் டேட்டிங்குக்கு சரியான இடம். மணல் பரப்பில் படுத்துக் கொண்டு ஆகாயத்தை பார்த்து அழகை ரசிப்பது இதமான அனுபவமாக இருக்கும்.
அப்போது அருகில் கண்டிப்பாக ஒயின் இருக்க வேண்டும். ஒயின் குடித்தபடி மணலில் படுத்து பேசிக் கொண்டு இருந்தால் இரு மணங்களும் ஒன்றி போய்விடும்.