சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது

சென்னை புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது

Chennai-book-fair

ஜனவரி 20, 2015-ம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 9-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. 700 அரங்குகள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், கவிதை, புதினம், இலக்கியம், சிறுவர் விரும்பும் சித்திர கதைகள் போன்ற பல்சுவை கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.

புத்தக கண்காட்சியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட புத்தக திருவிழா நாளை (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புத்தக கண்காட்சிக்கு இதுவரை 6 லட்சம் மக்கள் வந்துள்ளனர். தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சினிமா, அரசியல், அறிவியல், வரலாறு, சமையல், ஜோதிடம், மொழியியல், குழந்தை இலக்கியம் போன்ற தலைப்பிலான நூல்களும், படிப்பிற்கு உதவும் குறுந்தகடுகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.

புத்தக கண்காட்சி 21-ந்தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது. எனவே இந்த புத்தக கண்காட்சிக்கு இதுவரை வராதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.