6 அடி உயரம் இருந்தால் தான் கழுத்தை நீட்டுவேன்: லட்சுமி மேனன்

6 அடி உயரம் இருந்தால் தான் கழுத்தை நீட்டுவேன்: லட்சுமி மேனன்

lakshmi-menon1

ஜனவரி 19, 6 அடி உயரம் இருந்தால் தான் கழுத்தை நீட்டுவேன்’ என்று கண்டிஷன் போட்டார் லட்சுமி மேனன்.ராசியான நடிகை என்ற முத்திரையுடன் கோலிவுட்டில் வலம் வருகிறார் லட்சுமி மேனன். இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. அதை விஷால் ஏற்கனவே மறுத்துவிட்டார். இந்நிலையில் லட்சுமிமேனனிடம் உங்களுக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு பதில் அளித்தார்.”எனக்கு வரும் மாப்பிள்ளை என்னைவிட உயரமாக அதாவது, 6 அடி உயரம் இருக்க வேண்டும். என்னைவிட கூடுதலாக படித்திருக்க வேண்டும்.

சினிமாக்காரராக இருக்கக்கூடாது”என வரிசையாக கண்டிஷன் போட்டவர், ” காதல் திருமணம்தான் செய்வேன்” என்று தனது முடிவை பற்றி சொன்னார். 6 அடி உயரம் சரி. ஆனால் சினிமாக்காரராக இருக்கக்கூடாது என்று சொல்லி விஷாலுடனான காதல் கிசுகிசுவுக்கும் நாசுக்காக முற்றுபுள்ளி வைத்ததுதான் கொஞ்சம் இடிக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.இதற்கிடையே சுசீந்திரன் படத்தில் விஷாலுக்கு லட்சுமி மேனன்தான் மீண்டும் ஜோடியாக தேர்வானார். ஆனால் தொடர் கிசு கிசுக்களால் விஷாலின் ரியல் காதலியான அந்த நடிகை பிரஷர் கொடுத்தாராம். அதனாலேயே மேனன் நீக்கப்பட்டு, காஜல் அகர்வால் ஒப்பந்தமானாராம்.