கே.ஃப்.சி உணவகத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

கே.ஃப்.சி உணவகத்தில் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது

ffc1

ஜனவரி 19, கே.ஃப்.சி துரித உணவகத்தில் சண்டையிட்டுக் கொண்ட தனது ஊழியர்களால் இந்நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
ஜாலான் ராஜா லாவுட்டில் அமைந்துள்ள கே.ஃப்.சி உணவகத்தில் நேற்று திடீரென இரு ஊழியர்கள் சண்டையிட்டுக் கொண்டனர். இவர்கள் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதற்கானக் காரணம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள் இருவரும் சகோதர்கள் என்பதால் குடும்பத் தகராரின் காரணமாகத்தான் இச்சண்டை நடந்திருக்கக் கூடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும் இச்சண்டை அழுவல் நேரத்தில் அதுவும் வாடிக்கையாளர்களின் முன் நடந்துள்ளதால் கே.ஃப்.சி நிறுவனம் தன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.