ஜனவரி 19, தொடர்ந்து பெய்து வரும் கனத்த மழையால் சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
சரவாக்கில் கடந்த சில தினங்களாக கடுமையான தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு படாவான், லிம்பாங், கூச்சிங் மற்றும் சிமுஞ்சான் போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சரவாக்கில் 1899 பேர் துயர் துடிப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இத்தொடர் மழையால் சரவாக்கில் இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் பல ஆயிரம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படவுள்ளாதால் இப்பொழுதிலிருந்தே பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சரவாக்கில் பல பகுதிகளில் மோசமான வெள்ளம்
