ஜனவரி 14, நேற்று இரவு மூன்று கேளிக்கை மையங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
பினாங்கு குடிநுழைவு துறையால் நடத்தப்பட்ட இந்த அதிரடிச் சோதனையில் 20 வயதிற்கு மேற்பட்ட இந்த 56 வெளிநாட்டவர்கள் கையும் களவுமாகப் பிடிப்பட்டனர். அவர்களில் மிக கவர்ச்சியான உடையணிந்த 6 தாய்லாந்து நாட்டுப் பெண்களும் பிடிப்பட்டதாக குடிநுழைவுத் துறை அதிகாரி அஸ்புல்லா அப்டுல் ரஷிட் தெரிவித்துள்ளார்.
பிடிப்பட்ட இவர்களில் பலருக்கு முழுமையான பயண பத்திரங்கள் இல்லையாம். சிலர் கள்ளத்தனமாக நாட்டிற்குல் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.