தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

modi

ஜனவரி 14, பிரதமர் நரேந்திர மோடி இன்று டுவிட்டர் இணையத்தளம் மூலம் நாட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.

மற்ற மொழிகளில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாம் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடுகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமக்கெல்லாம் மிகவும் பெருமை தருவதாகும். நாடு முழுவதும் இந்த பண்டிகை உணர்வு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. எல்லாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.