ஜனவரி 23-ம் தேதி த்ரிஷா வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம்: த்ரிஷா அறிவித்துள்ளார்

ஜனவரி 23-ம் தேதி த்ரிஷா வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம்: த்ரிஷா அறிவித்துள்ளார்

trisha-varun

ஜனவரி 7, இம்மாதம் 23-ம் தேதி தனக்கும் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

த்ரிஷா, வருண் மணியன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வந்தபடி இருந்தன. இது குறித்து இரு தரப்பில் இருந்து எந்தொரு தகவலையும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பது குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

“ஜனவரி 23-ம் தேதி வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

திருமண தேதி குறித்து நிறைய செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இன்னும் திருமண தேதி முடிவாகவில்லை. திருமண தேதி முடிவான உடன் நானே அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.

நடிப்பை கைவிடுவது பற்றி எந்தொரு எண்ணமும் இல்லை. இன்னும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளேன். 2015-ம் ஆண்டில் நான் நடித்து 4 படங்கள் வெளியாக இருக்கின்றன” என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.