பொங்கலுக்கு 3 படங்கள் ரிலீஸ்

பொங்கலுக்கு 3 படங்கள் ரிலீஸ்

hqdefault (1)

ஜனவரி 7, பொங்கலுக்கு ‘ஐ’, ‘ஆம்பள’, படங்கள் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ‘டார்லிங்’ பேய் படமும் வருகிறது. மூன்று படங்களும் பொங்கலுக்கு மோதுகின்றன.

‘ஐ’ படத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கியுள்ளார். அதில் பொருட் செலவில் இப்படத்தை எடுத்துள்ளனர். ஹாலிவுட் நிபுணர்களை வைத்து கிராபிக்ஸ், மிக்சிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் செய்யப்பட்டது.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அழைத்து வந்து இதன் இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தினர். விக்ரம் இதில் மூன்று கேரக்டர்களில் வருகிறார். மனிதனும் மிருகமும் கலந்த தோற்றம் ஒன்றிலும் நடிக்கிறார். உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

‘ஆம்பள’ படத்தில் விஷால், ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். காதல், காமெடி படமாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகை குஷ்பு பாடல் காட்சியொன்றில் நடனம் ஆடி உள்ளார்.

‘டார்லிங்’ படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ரிக்கிகல் ராணி நடித்துள்ளார். தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமகதா சித்திரம்’ படத்தின் தமிழ் ரீமேக்கே ‘டார்லிங்’ படம் ஆகும். திகிலான பேய் படம்.

அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படம் பொங்கலுக்கு ரிலீசாவதாக இருந்தது. ஆனால் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் 29–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அஜீத் படம் வராத காரணத்தால் டார்லிங்கை ரிலீஸ் செய்கின்றனர்.