தனி ஒருவன் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு

தனி ஒருவன் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு

ravi nayan

ஜனவரி 2, ஜெயம் ரவி தற்போது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக காக்கி உடை அணிந்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக குதிரை சவாரி செய்யவும் பயிற்சி எடுத்திருக்கிறாராம்.

இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும் கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் படத்தில் 3 பாடல்கள் மற்றும் 2 முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் இந்த வருடம் ‘தனி ஒருவன்’, சுராஜ் இயக்கத்தில் ‘அப்பா டக்கரு’, லஷ்மணன் இயக்கத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் ‘பூலோகம்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.