தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம்

தமிழகத்தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம்

maoists1

ஜனவரி 2, தமிழகத் தில் தாக்குதல் நடத்த மாவோயிஸ்ட்கள் சதித்திட்டம் தீட்டியிருப் பதாக தகவல் வந்துள்ள தால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்த ‘கோப்ரா‘ மத்திய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்து வதால் அவர்கள் தங்களது இடத்தை அடிக்கடி மாற்றி வருகின்றனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறையினர், போலீசாரின் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் குறைந்துள்ளதாலும், வடமாநிலங்களில் போலீசாரின் கடும் நடவடிக்கையாலும் தென்மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஊடுருவல் கடந்த காலங்களைவிட அதிகரித்துள்ளதாக மத்திய, மாநில உளவுத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. தென்மாநிலங்களில் தாக்குதலில் ஈடுபட மாவோயிஸ்ட்களால் ‘தலாம்‘ என்றழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கபினி, நடுகானி, பவானி ‘தலாம்‘களும் சுரேந்தர் ரெட்டி, மோகன் ரெட்டி ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள், கர்நாடகா, கேரளா, தமிழக எல்லையோர வனப்பகுதிகளில் 5 குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளனர்.

இதில் சுமார் 45 ஆண்கள், 15 பெண்கள் வரை இருக்கலாம் எனவும், தாக்குதல்களில் நன்கு பயிற்சி பெற்ற இவர்களிடம் நவீன ஆயுதங்கள், கண்ணிவெடிகள், கையெறி குண்டுகள் ஆகியவை இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 3 மாநிலங்களும் சந்திக்கும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள் வன எல்லையை ஒட்டியுள்ள 65 இடங்களில் நடமாடி வருவதாகவும் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தென்மாநிலங்களில் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட அவர்கள் சதி திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவுத்துறையினர் கர்நாடக, கேரளா, தமிழக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக க்யூ பிரிவினர், அதிரடிப்படையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் நடத்தியது போன்று தமிழக எல்லையோர பகுதிகளான பாலக் காடு, சத்தியமங்கலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், குமுளி, ஸ்ரீவில்லிபுத்தூர், களியக்காவிளை, புளியரை உட்பட வனப்பகுதிகளை ஒட்டியுள்ள வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தவும், நள்ளிரவிலி ருந்து அதிகாலைக்குள் தாக்க வாய்ப்புள்ளதாகவும், அப்போது போலீசாரின் ஆயுதங்களை பறிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிகளில் வனத்துறை மற்றும் போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்ட்களை பிடிக்க 3 மாநில அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் துணையுடன் ஏராளமான உளவுத்துறையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் 3 மாநில அதிரடிப்படையினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விடுமு றையில் உள்ள அதிகாரி களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.