ஜனவரி 2, ஜாங்மி எனப்படும் வெப்பமண்டல புயல், சுலு கடற்பகுதியில் நேற்று இரவோடு ஓய்ந்து விட்டதாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மலேசிய வானிலை மையம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் ஜாங்மி புயல்காற்று இறுதியாக சபா, சண்டகானிலிருந்து 527 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்புயல் காற்றினால் பலத்த காற்றுடன் 3.5 மீட்டர் உயரம் வரை கடல் கொந்தளிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மலேசிய வானிலை மையம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த இயற்கை சீற்றத்தைக் குறித்து 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.