நிகிதாவுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஆசாமி

நிகிதாவுக்கு ஆபாச போட்டோ அனுப்பிய ஆசாமி

nikitha33-300

டிசம்பர் 29, முரண், சரோஜா, அலெக்ஸ் பாண்டியன் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நிகிதா. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் தொடர்பில் இருக்கிறார். இவரை ஏராளமான ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். சில குறும்புக்கார வாலிபர்கள் இவரது இணைய தள பக்கத்தை தவறாக பயன்படுத்தி செய்யக்கூடாத சேட்டைகள் செய்கின்றனர். சமீபத்தில் ஒரு ரசிகர் தனது நிர்வாண போட்டோவை நிகிதாவின் டுவிட்டர் பக்கத்தில் போட்டு ஷாக் கொடுத்தார். வேறு சில ரசிகர்கள் நடிகையிடம் ஆபாச கேள்விகள் கேட்கின்றனர்.

இதில் கடுப்பான நிகிதா கோபத்துடன் கூறும்போது, ‘’எனது டுவிட்டர் பக்கம் மூலம் என் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறேன். அவர்களது கருத்து அறிவதற்காக இதை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் சில விஷமிகள் விரும்பத்தகாதவற்றை செய்கின்றனர். ஆடையில்லாமல் ஒருவர் தனது போட்டோவை வெளியிட்டிருப்பதுடன் ஆபாசமாக மெசேஜ் போட்டிருக்கிறார். வேறு சிலரும் இதுபோல் ஆபாச மெசேஜ் அனுப்புகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான அறிவுரைகள் தேவைப்படுகிறது. நான் மட்டுமல்ல பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற டார்ச்சரை அனுபவிக்கிறார்கள். நடிகை என்பதால் எங்களுக்கு வரும் இதுபோன்ற விவரங்கள் அம்பலத்துக்கு வருகிறது. இதற்கு நான் மட்டுமல்ல எனது ரசிகர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.