டிசம்பர் 24, அமெரிக்காவில் அதிவேக சூப்பர் டியூப் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர் டியூப் ரயில் 35 நிமிடங்களில் சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 1200 கிலோமீட்டர் வேகம் செல்லும் இந்த சூப்பர் டியூப் ரயிலை வடிவமைக்க ஹைபர்லூப் டிரான்ஸ்பொடேஷன் டெக்னாலஜிஸ் பணியில் ஈடுபட்டுள்ளது.
இன்னும் 10 ஆண்டுகளில் பயணிகள் இந்த புதிய டியூபில் பயணம் செய்யலாம் என்று டெல்சா மோட்டார் நிறுவன சி.இ.ஓ-வும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான இலான் மஸ்க் கூறுகிறார் இவர். உலகம் முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1600 கிலோமீட்டர் தூரம் உள்ள நகரங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இந்த ‘ஹைபர் லூப்’ மட்டுமே பயன்படும் என கூறப்படுகிறது.