கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கட்டடப் பிரச்னையை தீர்த்துவையுங்கள்

கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கட்டடப் பிரச்னையை தீர்த்துவையுங்கள்

STAR

டிசம்பர் 9, கோலப்பிலா தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கம் லட்சுமணன், 4 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற பிதிய தகவலையும் தந்துள்ளார். இது போண்ற விபரங்கலை கோலப்பிலா ம.இ.கா தொகுதி தலைவர் காளிதாஸ், கட்சியின் தேசிய தலைவர் துணை டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியன் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அரசாங்கத்தின் முழு மானிய உதவி பெறும் தகுதியை கொண்ட இப்பள்ளிக்கு புதிய கட்டடம் பெறுவதில் நீண்டகால தடையாக இருந்து வருகிறது.
அடையாளம் காணப்பட்ட நிலங்கள் யாவும் பரிந்துரையில் மட்டுமே இருந்து வருவதாகவும், ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலத்தை இதுநாள் வரையில் கல்வி அமைச்சகம் கையகப்படுத்தாமலேயே இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார் காளிதாஸ். இதுநாள் வரை இங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக கோலப்பிலா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் என்று கூறினார். அவர் கோலப்பிலா தமிழ்ப்பள்ளி நில பிரச்னைக்கு உடனடி தீர்வு கானுமாறு டத்தோ ஸ்ரீ சுப்ரமணியத்தை அவர் வளிவுறுத்தி கேட்டு கொண்டார்.