மரம் விழிந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் பழுதுபார்க்கும் பணி

மரம் விழிந்த மகா மாரியம்மன் ஆலயத்தில் பழுதுபார்க்கும் பணி

LZKM5KV

டிசம்பர் 6, தொடர்ந்து பெய்து கனத்த மழையாலும், புயல்காற்றின் தாக்கத்தாலும் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று கெல்பின் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மீது கடந்த 17.11.2014 அன்று விழுந்ததை தொடர்ந்து, அலயத்தின் கூரை பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் லெட்சுமணன் மேற்கொண்ட விரைவான நடவடிக்கையின் மூலமாக, இவ்வாலயத்தின் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்டன. அப்பனிகளை நேரடியாக வந்து பார்வைவிட்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மாணிக்கம், இதற்கான செலவுகளை ஈடுகட்ட நிதி உதவிகளை வழங்கிய மாநில முதலவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் ஜெம்புல் நாடாளுமன்ற உறுப்பினர் டான் ஸ்ரீ முகமட் ஈசா ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.