காற்றில் பறக்கவிடப்படும் தேர்தல் வாக்குறுதிகளின் மத்தியில் இன்றைய இளைஞர்களின் கனவாக விளங்கும் தேசிய மஇகா இளைஞர் பிரிவு தலைவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றி இளைய சமுதாயத்திடம் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
நடந்து முடிந்த மஇகா இளைஞர் பிரிவின் தேர்தலில் தாம் உறுதியளித்தபடி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான , அனைத்து தொகுதி இளைஞர் பிரிவுக்கும் தலா இரண்டாயிரம் வெள்ளி மானியமாக வழங்குவதை நிறைவேற்றி கொண்டிருக்கும் திரு ச.சிவராஜ் இளைஞர்களிடையே நன்மதிப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
அந்தந்த தொகுதிகளில் மஇகாவின் சேவைகளை சிறப்பாக செயல்படுத்த இந்த மானியம் பயன்படுத்தப்பட வேண்டும்மென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாடுகளில் தொகுதிகளின் இளைஞர் பிரிவு தலைவர்களிடம் தலா ஆயிரம் வெள்ளியை வழங்கி வருகிறார்.
நடந்து முடிந்த சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாட்டில் முதல் முறையாக இந்நிகழ்வு நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாட்டிலும் மலாக்கா மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாட்டிலும் இவ்வாறு நிதி வழங்கப்பட்டது.
5-7-2014 ஜோகூர் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட திரு.ச.சிவராஜ் அம்மாநில தொகுதி இளைஞர்களுக்கும் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கும் இந்த நிதி வழங்கப்படும் என திரு.ச.சிவராஜ் தமதுரையில் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாடு
மலாக்கா மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாடு
சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாடு
ஜோகூர் மாநில மஇகா இளைஞர் பகுதி பேராளர் மாநாடு