என் தமிழ்

13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆந்திர அரசு தடை

அமராவதி,  07 மார்ச் 2026 : 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு அடுத்த 90 நாட்களுக்குள் தடை விதிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் பேசிய அவர், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத வகையில் 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், 13 முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கும் இந்தத் தடையை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து விரைவில் அரசு முடிவு எடுக்கும் என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

Scroll to Top