டிசம்பர் 5, அரசியல் சட்டம் மக்களுக்கு தந்துள்ள பேச்சுரிமையை பறிக்கும் 1948ம் ஆண்டின் தேச நிந்தனை சட்டத்தை மத்திய அரசாங்கம் ரத்து செய்யவேண்டும் என்னும் தீர்மானத்தை நேற்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியது.
கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங்சான் அந்த தீர்மானத்தை முன்பொழிந்தார். தேச நிந்தனை சட்டம் ரத்து செய்யப்படும் என்னும் உறுதிமொழியை நிறைவேற்ற பிரதமர் தவறிவிட்டார் என அவர் கூறினார். அம்னோ தலைவர் நஜிப் துன் ரசாக் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டி அவர் மேற்கண்டவாறு பேசினார்.
இத்தீர்மானத்தை முன்மொழிந்த மேலும் அவர் பேசியபோது ம.சீ.ச மற்றும் ம.இ.கா தலைவர்கள் இது பற்றி தங்களிடம் கலந்து பேசப்படவில்லை எனக் கூறியுள்ளனர்.