பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வு.

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வு.

4

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மீண்டும் அதிகரித்து, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை சரிந்துவரும் நிலையில், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை உயர்த்துவதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிட்டும் எனவும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.3 வாரங்களில் 2-வது முறையாக பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.2.25,டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப் பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தையொட்டி, திங்கள்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 91 காசுகள் வரையும், டீசல் விலையை லிட்டருக்கு 84 காசுகள் வரையும் குறைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.