உருகுவே ஜனாதிபதி தபரேக்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ டுவிட்டரில் வாழ்த்து.

உருகுவே ஜனாதிபதி தபரேக்கு வெனிசுலா ஜனாதிபதி மதுரோ டுவிட்டரில் வாழ்த்து.

1
தென்அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் தபரே வாஸ்க்வேஸ் 55.5 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ’டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில் அவர், “ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு வெற்றி தேடி தந்த உருகுவே மக்களுக்கு வெனிசுலாவின் பொலிவாரியன் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.