மலேசிய வந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

மலேசிய வந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

FILES-BANGLADESH-POLITICS-VOTE-HASINA

டிசம்பர் 2, வங்காள தேச பிரதமரான ஷேக் ஹசினா, இன்று தொடங்கி வியாழக்கிமை வரை மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அழைப்பின் பேரில் இரண்டாவது முறையாக பிரதமர் ஹசினா மலேசியாவுக்கு வருகை புரிகிறார். இவரின் வருகையைச் சிறப்பிக்கும் வகையில் புத்ரா ஜெயாவில் உள்ள டத்தாரான் பெர்டானாவில் அவருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு பிரதமர்களும் தங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசுவிருக்கின்றனர். மேலும், இரு நாட்டின் உறவுகள் மற்றும் இலாபங்களை ஈட்டி தரும் வணிகம் குறித்தும் பேச திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இரு பிரதமர்களும் குறிப்பிட்ட சில ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாக தெரிய வந்துள்ளது. இதனிடையே, வங்காள தேசத்தின் முக்கிய முதலீட்டு நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.