த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?

த்ரிஷாவின் டார்லிங் யார் தெரியுமா?

trishaa

டிசம்பர் 1, இரண்டு ஹீரோயின் படத்தில் ஹீரோவுடன் காம்பினேஷன் பாடல் கிடைத்தாலே அதிர்ஷ்டம். த்ரிஷாவுக்கு சோலோ பாடலே வாய்த்திருக்கிறது. படம் என்னை அறிந்தால்.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு சோலோ பாடல் ஒன்று உள்ளது. அதற்கான நடன ஒத்திகை எடுத்துக் கொண்டார் த்ரிஷா.

அதுபற்றி தனது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டவர், என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். மிகவும் உற்சாகமாக உணர்கிறேன் என கூறியிருந்தார்.

டார்லிங் என்றதும் ராணா முதல் வருண் மணியன்வரை உங்கள் ஞாபகத்துக்கு வந்திருந்தால் நாங்கள் பொறுப்பல்ல.