என் தமிழ்

அடுத்த தேர்தலில் தே.மு.வெற்றி நிச்சயமில்லை

020502-D-2987S-027

டிசம்பர் 1, தேசநிந்தனை சட்டத்தால் தேசிய முன்னணி 14-வது பொது தேர்தலில் வெற்றி பெறும் என்பது நிச்சம் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

அம்னோ மாநாட்டிற்குப் பின்னர் நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் மேற்கண்ட அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். இந்த தேச நிந்தனைச் சட்டம் முஸ்லிம்களையோ மலாய்க்காரர்களையோ பாதுகாப்பதற்காக மட்டும் நிலைநிறுத்தப்பட வில்லை எல்லா இனங்களையும் பாதுகாப்பதற்காகவே இது உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலவரத்தையும் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டாங்களையும் சுட்டி காட்டிய பிரதமர், அந்தமாதிரியான சம்பவங்கள் இங்கு நடந்தால் நிலைமை மிக அருவருப்பனதாக அமையும் மக்கள் ஒருவர் குரல் வளையை ஒருவர் வெட்டி கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

Scroll to Top